இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

22 18
Share

ஜனாதிபதி அநுரவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்த அவர்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) ஆட்சியில் இருந்து பேசப்பட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

எதிர்கால பொது மற்றும் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிடும் போது, ​​நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

அரசாங்க ஊழியர்கள், முடியாத அழுத்தங்களிலும் பிரச்சினைகளிலும் உள்ளனர், அதேவேளை, பலர் தங்கள் அஞ்சல் வாக்குகள் மற்றும் தீவிர ஈடுபாட்டின் மூலம் தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரித்தனர். எனவே, அரசாங்கம் அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த அரசாங்கம் அவர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆகையால், ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நியாயமான காலத்திற்குள் தீர்க்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் நாங்கள், எங்கள் சொந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்“ என வலியுறுத்தியுள்ளார்.

Share
Related Articles
27 5
இலங்கைசெய்திகள்

தீவிரம் அடையும் இந்தியா – பாகிஸ்தான் போர்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிரடி நடவடிக்கை

இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து...

30 3
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக...

29 4
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவியின் காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வந்தது! சிவானந்த ராஜா வெளியிட்டுள்ள தகவல்

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி தமது கல்வி நிலையத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் பல...

28 5
இலங்கைசெய்திகள்

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்மமாக மரணம் – உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள்

பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி நேற்று இரவு சுகவீனம் காரணமாக...