இலங்கைசெய்திகள்

இ.போ.சவின் வவுனியா சாலையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

Share
16 9
Share

இ.போ.சவின் வவுனியா சாலையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது.

குறித்த சாலையின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இன்று(09.02) காலை முதல் அவர்களால் பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் வவுனியா சாலையின் பேருந்துகள் காலை முதல் சேவைகளை முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில், சாலைக்கு சென்ற தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, அவர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவை விரைவாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரம் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கபட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...