WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

Share

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (31) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை எதிர்க்கட்சிகள் அரசியல் பழிவாங்கல் என்று கூறுவதை ஏற்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கில் நடந்த படுகொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டும் செயல்களே தவிரப் பழிவாங்கல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கான புகையிரத சேவை தற்போது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பயணிகளின் நலன் கருதி இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...