2v
இலங்கைசெய்திகள்

கொரோனா கால முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் : அநுர அரசு அளித்த பதில்

Share

கொரோனா கால முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் : அநுர அரசு அளித்த பதில்

நாட்டைப் பாதித்த கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பில் அறிக்கை தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தகவல்களை வழங்கவில்லை எனவும், தற்போதைய அரசாங்கமும் இது தொடர்பான தகவல்களை மறைத்து வருவதாகவும், இது நாட்டின் சுகாதார அதிகாரிகளையும் அவமானப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa), இது தகவல்களை மறைப்பதில் உள்ள பிரச்சினையல்ல, மருத்துவ நெறிமுறைகளில் உள்ள பிரச்சினையாகும்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 13,183 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் விவரங்களை வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்றும், அப்போதைய அரசாங்கத்தின் முடிவுகள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை என்றும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கம் இந்த தகவலை மறைக்க நினைக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி பதில் அளிப்பதாக மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...