ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு

rtjy 125

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

ஹிருணிகா பிரேமச்சந்திர நோய்வாய்ப்பட்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு வரவில்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியதன் காரணமாக ஹிருணிகாவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version