தேசபந்து மீதான நீதிமன்ற உத்தரவு: தேர்தல் மீதான தாக்கம் தொடர்பில் பெபரல் அமைப்பு விளக்கம்
தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தேர்தல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தடையுத்தரவு தேர்தல் நடாத்துவதில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
புதிய பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.