மட்டக்களப்பில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

நீர்த்தாங்கியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி – நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லிக்காட்டு பிரதேசத்தைச் சேர்நத 73 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அழகிப்போடி தற்கராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version