கைதடி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா!

kaithady elders home1

கைதடி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா!

கைதடி முதியோர் இல்லத்தில் 38 முதியவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதடி அரசாங்க முதியோர் இல்லத்தில் முதியவர்கள் சிலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் 38 முதியவர்களும், 2 உத்தியோகத்தர்களும் தொற்றுக்குள்ளானமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 7 உத்தியோகத்தர்களுக்கும் இன்று தொற்று உறுதியானது.

தென்மராட்சி பிரதேசம் ஆபத்தான வலயமாக மாறி வரும் நிலையில், மக்கள் தடுப்பூசியை விரைவாக செலுத்திக்கொள்வதே தம்மையும், சமூகத்தையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழியென சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Exit mobile version