இலங்கைஅரசியல்செய்திகள்

சமுதித்த வீட்டு தாக்குதல் – குற்றவாளிகளை விரைவில் அடையாளங்காணுங்கள்!!

Share
journalist killed
Share

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அச்சங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமுதித சமரவிக்கிரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்கு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும்.

அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்லை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது.” – என்றுள்ளது.

 

#SrilankaNEws

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
9 6
இலங்கைசெய்திகள்

ரணிலின் ஊழியர் ஒருவருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின்...

6 7
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் படைவீரர் ஒருவரை கைது செய்த இந்திய எல்லைப்படையினர்

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படை உறுப்பினர் ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது...

7 6
இலங்கைசெய்திகள்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி...

8 6
இலங்கைசெய்திகள்

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்குச் சென்ற பெண்ணொருவர், இடைவழியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்...