13 14
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை : பௌத்த சாசன அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Share

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை : பௌத்த சாசன அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

யாழ். தையிட்டியில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் பௌத்தசாசன அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி குறித்த விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்தவிவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம் தற்போது விகாரையை நிர்வகிப்பதுடன் தற்போது அங்கு கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன. அதில் பௌத்த மதகுரு ஒருவர் தங்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இந்த பெயரில் விகாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு நிலம் மட்டுமே உள்ளது. மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த விகாரைகளை நிர்வகிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, இராணுவத்தினால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் காணியில் அமைக்கப்பட்ட குறித்த விகாரையை அகற்றக்கோரி கடந்த இரண்டு நாட்களாக மக்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....