நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

rtjy 230

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

சந்தேகநபரை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது, ​​அவரை மீண்டும் கைது செய்ய கால்வாயில் குதித்த பொலிஸ் உத்தியோகத்தரான கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போதே குறித்த உத்தியோகத்தர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Exit mobile version