2
இலங்கைசெய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை

Share

தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் ரணில்! ஓய்வு பெற விரும்பவில்லை

மக்கள் மாறிவிட்டார்கள், தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya)  தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பல முறை நிகராரிக்கப்பட்டு, தனது தொகுதியிலேயே பல முறை தோல்விகண்ட ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு எப்படி அரசமைப்பு தொடர்பில கற்பிக்க முடியும் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறவில்லை. தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்க்கையிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றார். ஓய்வு பெற விரும்பவில்லை.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதையும் தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை.  இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும்? அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார்.

தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடமாட்டார், எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்கவேண்டும்.

தங்களிற்கு அனைத்தும் தெரியும் ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது என நினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்துபோனது.

அவ்வாறான அரசியல் கலாசாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...