இலங்கைசெய்திகள்

நட்டஈடு கோரப்படும்: ரணில் பகிரங்க எச்சரிக்கை

Share
நட்டஈடு கோரப்படும்: ரணில் பகிரங்க எச்சரிக்கை
நட்டஈடு கோரப்படும்: ரணில் பகிரங்க எச்சரிக்கை
Share

நட்டஈடு கோரப்படும்: ரணில் பகிரங்க எச்சரிக்கை

இலங்கை வைத்தியர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் பிரித்தானியா போன்ற நாடுகளிடமிருந்து நட்டஈடு கோர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள வைத்தியர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் இலங்கையில் இருந்து வைத்தியர்களை இணைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கின்றனர்.

இது காலநிலை மாற்றத்தில் நமக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் போன்றது. பிரித்தானியா போன்ற நாடுகளிடம் வைத்தியர்கள் வெளியேறுகிறார்கள், அது எங்கள் தவறு அல்ல. ஒன்று அவர்களின் முறையை மாற்றி தங்களுடைய வைத்தியர்களுக்குச் சம்பளம் கொடுங்கள் அல்லது அதற்கான இழப்பீடுகளை எங்களுக்குக் கொடுங்கள்.

இதேபோன்று வேறு சில வெளிநாடுகளும் இலங்கை வைத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை உலக சுகாதார அமைப்புடன் எழுப்ப வேண்டும்.

தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆறு மாதங்களுக்குள் புதிய வைத்திய சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதாரச் செயலாளர், சட்ட வரைவாளர் மற்றும் SLMC இன் தலைவர் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு, மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் விதிகளை ஆய்வு செய்வதற்கும், பொருத்தமான ஏற்பாடுகளுடன் புதிய மருத்துவச் சட்டத்தை உருவாக்குவதற்கும் நியமிக்கப்பட்டுள்ளது.

உடனடி வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு, சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் மருத்துவப் பொருட்களுக்கு 30 பில்லியன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமானது.

மேலும், மருத்துவ தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் NMRA இன் பங்கை வலுப்படுத்த விரிவான அறிக்கைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் மருந்து விநியோகம் மற்றும் சரக்கு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் கலந்துரையாடப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சந்திப்பின் போது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கிடைக்கக்கூடிய மருந்துகள் மற்றும் அவற்றின் விநியோகம் குறித்த தகவல்களை வழங்க இணைய அடிப்படையிலான அமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, சுகாதார அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...