24 6646f749948ca
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Share

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளை(18) கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, நாளை காலை வெள்ளவத்தை(Wellawatte) தொடருந்து நிலையத்துக்கு அருகில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பால், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர யுத்தம் நிறைவடைந்து நாளை தினம் 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளன.

இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாளைய தினம் நினைவுகூரவுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு, வெள்ளை மலர்களுடன் வருமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் இன்று(17) மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...