1 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

Share

கொழும்பில் இருந்து யாழ் வந்த அதிசொகுசு பேருந்து கோர விபத்து – ஐவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து (Colombo) பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, லாண்ட் மாஸ்டர் வாகனத்தை மோதித்தள்ளியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும்இ அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் சொகுசு பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்தனர்.

சொகுசு பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.

காயம் அடைந்தவர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...