கட்டிடத்தின் மேல் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய வைத்தியசாலை ஊழியர்

24 665977659068b

கட்டிடத்தின் மேல் தளத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய வைத்தியசாலை ஊழியர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லனவுக்கு எதிராக ஊழியர் ஒருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த ஊழியர் வைத்தியசாலை வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி இன்று (31) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்த கருத்துக்கள் காரணமாக கனிஷ்ட ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எற்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரை பதவி விலக கோரி ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, வைத்தியர் ருக்சான் பெல்லனவுக்கு எதிராக இன்று ஊழியர் ஒருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version