ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கைசெய்திகள்

ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Share

ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்களுடன் நடத்திய சந்திப்பின் பின்னர், வைத்தியசாலை பணிகள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளரான வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (19.07.2023) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைப் பணிப்பாளர் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறியமையினால் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இப்பிரச்சினையைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்ல நேரிட்டதாகவும் அதற்காக ஒரு வார கால அவகாசம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை எனவும், இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது.

இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜி.விஜேசூரிய இந்த வேலைநிறுத்தம் குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...