கொழும்பிலிருந்து சென்ற இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
தங்கோவிட்ட, கம்புரதெனிய பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இரவு (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Comments are closed.