இலங்கைசெய்திகள்

யாழ் – கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

Share
12 6
Share

யாழ் – கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) மேலதிகமாக இரு தொடருந்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக யாழ் – கொழும்பிற்கு ஒரேயொரு தொடருந்து சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில், இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது வேண்டுகோளிற்கு அமைவாக 15 ஆம் திகதியில் இருந்து ஒரு தொடருந்து சேவையும், 31 ஆம் திகதியில் இருந்து பிறிதொரு தொடருந்து சேவையும் ஆரம்பிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...