5 17
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் எந்த அணி ஆட்சியமைப்பது! பிரதான அரசியல் கட்சிகள் தீர்க்கமான பேச்சுவார்த்தை

Share

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இந்த வாரம் இடம்பெறவுள்ளன.

ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளில் இருந்து 69 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் தனிக் கட்சியாகத் தேசிய மக்கள் சக்தியில் இருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைத்துள்ளதால் தாமே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாக ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது.

எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், கூட்டணியமைத்துப் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையிலேயே இந்த வாரமும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...