முடிவுத்திகதி இன்றாம்- விண்ணப்பித்து விட்டீர்களா?

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகிறது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் என்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவலால், கடந்த டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அது இந்த வருடம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#SriLankaNews

Exit mobile version