அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு அறிவுறுத்தல்

24 66076d93ebdf1

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் இன்று (30)பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version