Mahinda Ranil 2 1 5 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மாற்றம்

Share

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் மாற்றம்

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரணமான நிலையில் இருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கிலிருந்து வீசுவதுடன், மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கில் இருந்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய கடற்பரப்புக்களில் குறிப்பிட்ட திசையின்றி காற்று வீசக்கூடும் எனவும் காற்றின் வேகம் மணிக்கு 15-30 கிலோ மீற்றர் வரை இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்.

மேலும் இன்று (17) நாடளாவிய ரீதியில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...