பிக்கு மாணவர் சடலமாக மீட்பு

tamilni 279

பிக்கு மாணவர் சடலமாக மீட்பு

மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனாவில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்றைய தினம் (21.08.2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 வயதுடைய பிக்கு மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரிவெனாவில் குறித்த பிக்கு இல்லாததால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து மீட்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version