எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக் கொண்டு, சிவனொளிபாதமலை தளத்தைப் பொலித்தீன்/பிளாஸ்டிக் இல்லாத தூய தளமாகப் பராமரிக்க, ‘தூய இலங்கைத் திட்டம்’ (Clean Sri Lanka Project) கீழ் தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயற்படுத்தப்படுகிறது.
இதன் ஆரம்பத் திட்டம் இன்று (நவம்பர் 25) சிவனொளிபாதமலை உடமலுவைச் சுற்றியுள்ள பகுதியில் 50 இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம், சிவனொளிபாதமலை நுழைவாயில்களைச் சுற்றியுள்ள பகுதியில் நவம்பர் 29 ஆம் திகதி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் தளமானது பிளாஸ்டிக் இல்லாததாக இருப்பதை உறுதி செய்வதற்கும், யாத்திரைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும் இத்திட்டம் உதவுகிறது.
இந்தப் புனிதமான பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

