13 1
இலங்கைசெய்திகள்

இலங்கை பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்!

Share

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘Clean Sri Lanka’ திட்டத்தின் நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ‘Clean Sri Lanka’ திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...