டயானாவுடனான மோதல் : பதவியை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

rtjy 73

டயானாவுடனான மோதல் : பதவியை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணை குழு இன்று (06.11.2023) கூடவுள்ள நிலையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குறித்த குழுவானது இந்த விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டது.

மேலும், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான நாடாளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளையும் குழுவால் அண்மையில் அவதானிக்கப்பட்டது.

இந்த விசாரணை குழுவுக்கு இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளில் ஏதேனும் ஒரு தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மூன்று மாத காலத்திற்கு நாடாளுமன்ற

Exit mobile version