24 663adb8a0c70c
இலங்கைசெய்திகள்

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று முதல் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு நேற்று வரை கடுமையான வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலநிலையின் திடீர் மாற்றத்தால் சில பகுதிகளில் மழைவீச்சிக்கு அதிக வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...

06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலையில் கொடூரம்: சடலத்திற்கு பாலியல் இழுக்கு செய்த சிற்றூழியர்கள் – மக்கள் போராட்டம்!

ஹட்டன் – ஏபோட்ஸிலி தோட்டப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த பெப்ரவரி...

05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்: அந்நியச் செலவாணி சட்டக் கட்டளைகள் இன்று விவாதத்திற்கு!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 –...