கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு சென்ற சிஐடி அதிகாரிகள்
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளனர்.
தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த வாக்குமூல பதிவுவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரைக் கைது செய்ய வேண்டுமென ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கூச்சல் போடுவதால் அது நடக்காது.
இந்த விவகாரத்தில் தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.