எதிர்காலத்தில் இலங்கை, பிரிக்ஸ் கூட்டணியில் சேர்ந்து கொள்வதற்கு தாம் உதவ முடியும் என்று சீனா(China) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிக்ஸ் என்பது வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37.3வீதத்தை பங்களிக்கும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் ஒரு கூட்டமைப்பாகும் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ரஸ்யாவின்(Russia) கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், இலங்கை, இந்தக் கூட்டமைப்பில் சேருவதற்கான தனது கோரிக்கையை பதிவு செய்தது.
இருப்பினும், பிரிக்ஸ் அமைப்பை தற்போது விரிவாக்கத் திட்டம் இல்லாததால், இலங்கையின் விண்ணப்பம் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
2024 எனினும் ஒக்டோபரில், பிரிக்ஸின் ஸ்தாபக உறுப்பு நாடுகளான, பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளை கூட்டமைப்பில் இணைந்தன.
இதனையடுத்து 2025 ஜனவரியில், இந்தோனேசியா இந்த கூட்டமைப்பில் பத்தாவது உறுப்பினராக இணைக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் பிரேசில் செயற்படுகிறது முன்னதாக, எதிர்காலத்தில் இலங்கை பிரிக்ஸில் சேர ரஸ்யா ஆதரவளித்தது.
அதன் பிறகு, புதிய உறுப்பினர்கள் கூட்டமைப்பில் வரவேற்கப்படும்போது இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பதாக இந்தியாவும் அறிவித்தது. இந்தநிலையிலேயே சீனாவும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், தற்போதைய உலகளாவிய பொருளாதார முன்னேற்றங்களின் கீழ், டொலருக்கு பதிலாக புதிய வர்த்தக நாணயம் ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள், தனது நாட்டுடனான வர்த்தகத்தில் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளமை, பிரிக்ஸ் செயற்பாடுகளை தற்காலிகமாக மந்தப்படுத்தியுள்ளது.