7 53
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம்: சீனத் தூதுவர் வலியுறுத்து

Share

இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக சில தரப்புக்கள் தமது பொருளாதார சூழ்நிலையை சாதகமாக்க முயற்சிக்கும் நேரத்தில் இந்த கொள்கை அவசியமானது என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங் கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சீனாவின் நிலைப்பாடு மற்றும் இலங்கையுடனான எதிர்கால உறவுகளைத் தெளிவுபடுத்திய குய், இலங்கை, தமது பொருளாதார நிலைமையிலிருந்து மீள்வதற்கு, ஏனைய நாடுகளின் உதவி தேவை என்பதை சில தரப்பினர், இலங்கை தரப்பிடம் சித்தரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சித்தரிப்பு தவறானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருப்பதற்கோ அல்லது இலங்கை மக்களுக்கு உதவுவதற்கோ எந்தவொரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலையும் சீனா கொண்டிருக்கவில்லை. இலங்கைக்கான சீனாவின் உதவி, அது ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கும், வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொள்ளவும் உதவும் என்று தாம் உறுதியாக நம்புவதாக குய் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தொடர்ச்சியான தேர்தல்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம், இலங்கை ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. அத்துடன் இலங்கையின் எதிர்காலத்தில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் குய் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் பிரவேசிப்பதற்கான சீனாவின் கோரிக்கையை முன்னாள் அரசாங்கம் நிராகரித்ததால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இரண்டு நாடுகளுக்கும் வலுவான உறவுகள் இருந்தபோதிலும், இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டமை ஏமாற்றமளித்ததாக குய் தெரிவித்துள்ளார். மாலைத்தீவு கடற்பரப்பில் அந்த ஆராய்ச்சிக் கப்பல்கள் வரவேற்கப்பட்டதாகவும், ஆனால் இலங்கை அதை நிராகரித்ததால் ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்ததாக சீனாவின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...