24 65ff905334fd9
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் பெறும் சிறுவர்கள்

Share

இலங்கையில் பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் பெறும் சிறுவர்கள்

கதிர்காமம், செல்ல கதிர்காம ஆலயங்கள் மற்றும் கிரிவெஹெர விகாரையிலும் தனியாகவோ அல்லது பெற்றோருடன் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் யாசகம் பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் எடுத்து வருகின்றனர்.

கதிர்காமம் பொலிஸார் இந்த சிறுவர்களை பொலிஸ் காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதிலும் பெற்றோர்கள் அவர்களை மீட்டு, மீண்டும் அதே வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இவர்களில் சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ஆலயத்திற்கு வருகை தரும் யாத்திரிகர்களை ஏமாற்றி, பாடப்புத்தகம் வாங்க வேண்டும் என்று கூறி அவர்களிடமிருந்து பெற்ற பணத்தில் மதுபானம் வாங்கியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கதிர்காமம் ஆலய வளாகத்தில் உள்ள பூஜை பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களால் சிறுவர்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி: 10 இடங்களை முதன்மைப்படுத்த மாவட்ட செயலகம்

திட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்...

world 36
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தொடரும் கனமழை: 5 மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்த்தளத் தளம்பல் நிலை (Low-level atmospheric disturbance) காரணமாக, நாட்டின்...

world 35
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உதய கம்மன்பிலவுக்கு பொலிஸ் அழைப்பாணை: ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து விசாரணை

தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, எதிர்வரும் மே...

world 34
செய்திகள்அரசியல்இலங்கை

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை வருகை: கொழும்பில் இன்று மற்றும் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

வியட்நாம் குடியரசின் ஜனாதிபதியும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், ஜனாதிபதி அனுர...