பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா தொற்று

25 6846a15d78c4b

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இன்றையதினம்(9) பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 ஊழியர்களும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளால் (09) அன்று குறித்த பகுதி முழுவதும் புகை விசிறல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version