இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் மிளிரும் சதுரங்க வீர வீராங்கனைகள்

Share

முல்லைத்தீவில் மிளிரும் சதுரங்க வீர வீராங்கனைகள்

சிறிலங்கா சதுரங்க சம்மேளனத்தின் கீழ் நடத்தப்பட்ட தேசிய ஆரம்பநிலை அல்லது புதியவர் பிரிவு (Novice Division) சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் அடுத்து சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட போட்டி ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கடந்த எட்டு மற்றும் ஒன்பதாம் திகதிகளில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் 85 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

திறந்த பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், திறந்த பிரிவில் 58 பேரும் மகளிர் பிரிவில் 27 பேரும் பங்கேற்றனர்.

முல்லைத்தீவு நகரப் பகுதி, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு விஸ்வமடு, மல்லாவி, மாங்குளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வீர வீராங்கனைகள் இந்த சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 25 வீர வீராங்கனைகள் வட மாகாண மட்டத்தில் நடைபெறவுளள மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திறந்த பிரிவில் 14 வீர வீராங்கனைகளும் மகளிர் பிரிவில் 11 வீராங்கனைகளும் மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கு முல்லைத்திவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பரிசில்களை வழங்கிவைத்தார்.

முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களும் ஏனைய வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...