24 6742ade0240ce
இலங்கைசெய்திகள்

மாணவர்களிடையே சதுரங்க போட்டியின் முக்கியத்துவம் குறித்து வடக்கு ஆளுநர் முன்வைத்த கருத்து

Share

இன்றைய மாணவர்கள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர். அத்தகைய பிள்ளைகளுக்கு இவ்வாறு சதுரங்கத்தைப் பழக்கி போட்டியில் பங்குபற்றச் செய்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26.05.2025) நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் செல்வகுணாளன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில், “மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல.

அத்தகைய நிறுவனங்களின் தலைமையில் இருப்பவர்கள் புத்தாக்கமாக சிந்தித்து செயற்பட வேண்டும். அந்த வகையில் பிரதேச செயலர் சா.சுதர்சன், நான் யாழ். மாவட்டச் செயலராக கடமையாற்றிய காலத்தில் உதவி மாவட்டச் செயலராகப் பணியாற்றியவர்.

அவர் எந்தவொரு விடயத்தையும் விரைவாகச் செய்து முடிக்கக்கூடியவர். உண்மையில் இவ்வாறான சதுரங்கப்போட்டிகளை ஒழுங்குபடுத்திய அவரைப் பாராட்டுகின்றேன்.

அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் விவாதப்போட்டி நடத்த திட்டமிடுகின்றார். அவ்வாறான சிந்தனையுள்ளவர்களே – இவ்வாறான தலைமைத்துவப் பண்புகள் உள்ளவர்களே இன்று எமக்குத் தேவையாகவுள்ளனர்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...