14 2
இலங்கைசெய்திகள்

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் சாணக்கியன்

Share

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளைய தினம் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஒரு சில நாட்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை உணவகம்

அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு போராட்டத்தினை அடையாளமாக நாளைய தினம் மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுகின்றோம்.

இந்த போராட்டமானது நாளைய தினம் மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இருக்கின்றோம்.

அந்த வகையில் கட்சி பேதங்கள் இன்றி எங்களுடைய அனைத்து தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் தெரியும், செம்மணியில் மாத்திரம் அல்ல கடந்த காலத்தில் கொக்குத்தொடுவாயிலும் கூட மனிதப் புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இவற்றிற்கு இதுவரையில் எவ்வித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

99ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்காக அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து விசேட ஒரு குழுவினருடைய ஆதரவையும் அரசாங்கம் கேட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது குறித்த மனித புதைகுழியை விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அளவு தேவையான தொழிநுட்ப அறிவு இல்லாமையின் காரணமாக சர்வதேச உதவியை இலங்கை அரசாங்கம் நாட வேண்டும். இலங்கை உணவகம்

புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஊடாக கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி அவர்கள் உயிரிழந்திருக்கின்றமை தெரியவருகின்றது. ஆடைகள் இல்லாமல் இவர்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தினர், நேர்மையான விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குக் கிடையாது. அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்கு அனைவரும் அணி திரளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...