24 6642ba24ed97c
இலங்கைசெய்திகள்

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சிக்கல்

Share

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சிக்கல்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளிலும், வாடகை அறைகளிலும் தங்கி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 02 நாட்களில் ஒவ்வொரு கிராம அதிகாரியின் பிரிவுகளிலும் தற்காலிகமாக வசிப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.

வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வீடுகளில் 37,183 குடும்பங்களில் 112,963 பேரும், வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட அறைகளில் 34,133 பேரும், காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள், தாதியர் என 31517 பேரும் தற்காலிகமாக வசிக்கின்றனர் என்றும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒழுங்குமுறை தரவு அமைப்பு, தானியங்கி கைரேகை அடையாள அமைப்புக்கு அனுப்பி அறிக்கைகளைப் பெற்று, போதைப்பொருள் பணியகத்தின் தரவு அமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன்படி மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...