சனல் 4 காணொளி : சர்வதேச விசாரணை

rtjy 83

சனல் 4 காணொளி : சர்வதேச விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சனல் 4 ஊடாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களை நூறு வீதம் ஏற்கவும் முடியாது. அதேபோல் நிராகரித்து விடவும் முடியாது. எனவே சனல் 4வில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில் இங்கு விசாரணையை ஒப்படைத்து சரிவராது. இங்கு இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் திருப்தியும் இல்லை.சனல் – 4 காணொளி குறித்து விசாரணை அவசியம் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

எனவு ஐ.நாவின் கோரிக்கையின் பிரகாரம் சர்வதேச விசாரணை நடத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version