இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்!

tamilni 355

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம்!

இன்டர்போலிடம் பிள்ளையான் சரணடைவதே முக்கியம் என பிரித்தானியத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றது, ரவிராஜை கொன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் குறிப்பிட்ட காலம் வரை தங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று சொன்னவர்கள் தற்போது குத்துக்கரணம் அடித்துள்ளார்கள் என்றும் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version