tamilni 289 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 கயிற்றை இறுகப்பிடிப்போருக்கு அது மரணக் கயிறாக மாறும்

Share

சனல் 4 கயிற்றை இறுகப்பிடிப்போருக்கு அது மரணக் கயிறாக மாறும்

சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.2023) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் இலாபத்துக்காக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புலனாய்வுத்துறையை 2001 – 2004 காலத்தைப் போன்றும், 2015 காலத்தைப் போன்றும் வீழ்ச்சியடையச் செய்து இராணுவத்தினரைப் பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்துக்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.

அரசைத் தாக்குவதாகக் கூறி எமது இராணுவத்தினரைத் தாக்குவதற்கு இடமளிக்க முடியாது.

எமது தாய்நாட்டுக்கு தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. இதனால் சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருபவர்கள் சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் விசாரணை அமைப்பு இங்கே வந்தது.

அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்துகொண்டு இங்கே பிரிவினை வாதத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...