rtjy 116 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 : சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை

Share

சனல் 4 : சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை

சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த படத்தொகுப்பில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 4 இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தில் சுரேஷ் சலே முறைப்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான சூழலில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது என சுரேஷ் சலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை வெளியிடுவதற்கு முன், ஆகஸ்ட் 7ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வினவியதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்த காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்றும் சுரேஷ் சலே சனல் 4 இற்கு அடுத்த நாளே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
115172051 109306773 exhuast reu 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடும் உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு...

court
செய்திகள்இலங்கை

சம்மாந்துறை நீதிமன்றம் அதிரடி: நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தாக்கல் செய்த 6 வழக்குகளும் தள்ளுபடி!

நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல்...

1733223253 aswesuma 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் நாளை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி...

622125104 1325536482939302 6745474682638740316 n large
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்: அனர்த்தத்தால் சிதைந்த மதத்தலங்களை மீளக் கட்டியெழுப்பும் பணி கம்பளையில் ஆரம்பம்!

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மீளக் கட்டியெழுப்பும் ‘கட்டியெழுப்புவோம்...