உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது

rtjy 49

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவையற்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05.09.2023) கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி இன்றிரவு ஒளிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னுரையை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஊடகப்பேச்சாளர் மற்றும் நிதி பரிபாலகராக செயற்பட்டதாகக் கூறப்படும் ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரும் மற்றுமொரு அரச உயரதிகாரி ஒருவரும் வாக்குமூலமளிக்கும் வகையில், இந்த முன்னுரை காணொளி அமைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளதாக ஹன்சீர் அசாத் மௌலானா இதில் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையை சீர்குலைத்து ராஜபக்சவை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரிக்கும் நோக்கில், 2018 ஆம் ஆண்டு உயர் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, ISIS-உடன் இணைந்த குண்டுதாரிகள் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்சக்களுக்கு தேவைப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயம்.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version