tamilni 104 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை: பிள்ளையான் அடுக்கும் காரணங்கள்

Share

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை: பிள்ளையான் அடுக்கும் காரணங்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த காலப் பகுதியில் தம்மை மகிந்த ராஜபக்ச சந்தித்தமைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், சனல் 4 ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப் பதிவின் அடிப்படையில் தமது பெயர் தொடர்புபடுத்துகின்றமைக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுவதாகவும் அவர்களை காப்பாற்றவே அசாத் மௌலான போலி குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றார் என சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடாளுமன்றில் (06.09.2023) தெரிவித்தார்.

அத்துடன் குறித்த குண்டுத்தாக்குதலை ஐ எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார் எனவும் ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர் எனவும் கூறியிருந்தார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...