சனல் 4 இன் ஆவணப்படம்: ரணிலின் பதில்
சனல் 4இன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்விற்கு முந்தைய நாடகமாக அரசாங்கம் கருதுகிறது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இந்த வீடியோ குறித்து நிதானமான விதத்தில் பதிலை வெளியிட வேண்டும் எனவும் அரசாங்கம் கருதுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை சனல் 4 தொடர்பில் குற்றம்சாட்டியவர்கள் மாத்திரம் அதற்கான பதில்களை வழங்க வேண்டும், அரசாங்கம் வழங்க தேவையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் டெய்லி மிரர் கூறியுள்ளது.
Comments are closed.