29
இலங்கைசெய்திகள்

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 17, 2020 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானியின்படி, இஞ்சி இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் உள்நாட்டு பாவனைக்கான உலர் இஞ்சியின் வருடாந்த தேவை 5,167 மெட்ரிக் தொன் என விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இஞ்சியின் அளவு வருடத்திற்கு 19,375 மெட்ரிக் தொன்கள் ஆகும்.

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சந்தையில் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு கிலோ இஞ்சியின் விலை 5,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக விதை இஞ்சியை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2025) நாட்டில் உள்ள டொலர் கையிருப்பை பாதுகாக்கும் வகையில் உள்ளுர் கைத்தொழில்களுக்கு தேவையான இஞ்சியை மட்டும் இறக்குமதி செய்வதே பொருத்தமானது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...