tamilnaadi 116 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையில் மாற்றம்

Share

மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையில் மாற்றம்

மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இந்தியாவிற்கு செல்லாமல் இருந்திருந்தால், யு.பி.ஐ இந்த நாட்டில் பணம் செலுத்தும் முறைக்கு எதிராக பல தவறான கருத்துக்களைப் பரப்பியிருப்பார்கள் என்றும் அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பொது விளையாட்டு மைதானத்தில் மொனராகலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இன்றும் (17) நாளையும் (18) நடைபெறவுள்ள இலங்கையை வெற்றிகொள்வோம் திட்டத்தின் நிகழ்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் அவர்களிடமிருந்த இந்திய விரோத கொள்கையை மாற்றியமைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இது அவர்களிடம் ஒரு நிரந்தரமன சிறந்த கொள்கை இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாகும். இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது சாதகமான விடயம்.

மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையினால் உயிர் இழந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கிடைக்காமையானது மிகவும் சோகமான வரலாற்றை நினைவுப்படுத்தும்

எதிர்காலத்தில் இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

இலங்கைக்கு வழங்கும் ஆதரவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொள்கைகளுக்கு வாக்களித்தமையால்தான் நம் நாடு இந்நிலைக்கு வந்தது.

ஆனால் நாட்டிற்கு வெற்றியைத் தரும் வாய்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே எனக்கு எப்போதும் இருந்த எண்ணமாகும்.

இந்நிலையில், மக்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் வாய்ப்பிற்காக நான் நின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக்கூடிய தலைமைக்காக நான் நிற்கிறேன்.

மேலும், கொள்கைகளை மாற்றுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டானது அண்மைக்காலமாக பேருந்துவண்டிகளில் மக்களை ஏற்றி கூட்டத்தை நடாத்தும் மக்கள் முன்னணியின் சகோதரர்களின் செயற்பாடுகள்.

இந்தியா தொடர்பில் அவர்களின் கொள்கை என்ன ஆனது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர்களின் ஐந்து கொள்கைகளின் ஒன்று இந்திய எதிர்ப்புக்கு கொள்கையாகும்.

அவ்வாறான கொள்கையினால் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்துவிட்டு இப்போது கொள்கையை மாற்றி விட்டதால் பறிபோன உயிர்களை மீண்டும் பெற முடியாது.

இந்த நாட்டு மக்களுக்காக நான் இவ்வளவு செய்தாலும், மக்கள் என்னைப் பொருட்படுத்தவில்லை என்ற கொள்கையில் ஜனாதிபதி இருந்தால், நாடு எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும்?

இந்நேரத்தில் நாட்டைக் காப்பற்ற முடியாது, மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என்ற மனப்பான்மையில் ஜனாதிபதி இருந்திருந்தால் இன்று இந்த நாட்டுக்கு என்ன நடந்திருக்கும்?

அத்தோடு, நாட்டை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என அனைவரும் கடந்த காலத்தில் கூறினார்கள்.

தவறு செய்த மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இப்போது இந்தியாவிற்கு செல்லவில்லை என்றால் ஜனாதிபதியின் தலையீட்டில் இந்திய UPI பண பரிவர்த்தனை முறையை ஜனாதிபதி உருவாக்கிய போது ரணில் நாட்டை இந்தியாவிற்கு விற்கப் போகிறார் என்று சொல்லி இருப்பார்கள்.

மேலும், அவர்கள் முன்பு சொன்ன கதைகள் நினைவிருக்கிறதா? இப்போது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் வளங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...