வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

7 6

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் உத்தேசித்து வருகின்றது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவன் செனரத் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லையென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சில சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை சீர்படுத்தியவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிலித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பான சட்டச் சிக்கல்களை சீர்படுத்துவது தொடர்பில் தற்போதைக்கு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version