இலங்கைசெய்திகள்

ரணிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்

Share
24 66260f78822ba
Share

ரணிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காக, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு (Chmuditha Samarawickrama) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டுள்ள முறைபாட்டிற்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘நீதவான் திலின கமகேவை (Thilina Gamage) கொல்வதற்கு பாதாள உலகத்துடன் இணைந்து சதி செய்த டி.ஐ.ஜி சகாவின் ஒலி நாடா இதோ’ எனும் தலைப்பினை கொண்ட காணொளி சமுதிதவால் அவரது யூடியூப் தளத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த காணொளி தொடர்பான அனைத்து விபரங்களையும் தகவல்களையும் கொண்டுவருமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சமுதிதவிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த காணொளியில் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...