வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி அறிவிப்பு

24 66023b7bda9b3

வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை எடுத்துள்ளது.

நேற்று (25) நடைபெற்ற கூட்டத்திலே கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 8.50 சதவீதமாகவும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 9.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கொள்கை வட்டி வீதம் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version