அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

24 65ff78d2611dd

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய வங்கியின் சம்பள திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கு உடனடியாக குழுவொன்று நியமிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு ஒத்திவைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும், மத்திய வங்கியில் திருத்தம் செய்யாமல் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் முதல் தீர்வு கிடைக்கும் வரை பழைய ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பொறுப்புக்கூறலின் கீழ் நாடாளுமன்ற நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மத்திய வங்கி இணங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version